கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டல் உதவி பேராசிரியர் மீது வழக்கு
கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக உதவி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நெல்லை:
நெல்லை அரசு சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில், நான் படிக்கும் கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசிரியர் ஒருவர் தன்னிடம் ஆசைவார்த்தை கூறி காரில் அழைத்து சென்று பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகவும், தன்னை செல்போனில் ஆபாசமாக படம் பிடித்து மிரட்டுவதாகவும் தெரிவித்து இருந்தார்.
அதன்பேரில் அந்த உதவி பேராசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story