குமரியில் மாவட்டத்தில் மழை நீடிப்பு


குமரியில் மாவட்டத்தில் மழை நீடிப்பு
x
தினத்தந்தி 14 May 2021 1:11 AM IST (Updated: 14 May 2021 1:11 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் கோடை மழை நீடிக்கிறது. அதிகபட்சமாக சிற்றார்-1 அணை பகுதியில் 38 மி.மீ. பதிவாகி உள்ளது.

நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் கோடை மழை நீடிக்கிறது. அதிகபட்சமாக சிற்றார்-1 அணை பகுதியில் 38 மி.மீ. பதிவாகி உள்ளது.
மழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. அதே போல நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பகலில் மழை பெய்தது. 
மேற்கு மாவட்ட பகுதிகள், மலையோர பகுதிகள் மற்றும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை கொட்டியது.
சிற்றார்-1 அணை 
குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிற்றார் 1 அணைப்பகுதியில் 38 மி.மீ. பதிவாகி உள்ளது. இதே போல மற்றப்பகுதிகளில் பதிவான மழை அளவு மி.மீ. வருமாறு:- 
பேச்சிப்பாறை-12.6, பெருஞ்சாணி-10.6, சிற்றார் 2-26, களியல்-1.1, குழித்துறை-8, புத்தன்அணை-10.2, சுருளோடு-3, பாலமோர்-1.4, முள்ளங்கினாவிளை-35 என்ற அளவில் மழை பதிவானது.
மழை காரணமாக அணைகளுக்கு போதுமான அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 218 கனஅடி தண்ணீர் வந்தது. பெருஞ்சாணி அணைக்கு 116 கனஅடியும், சிற்றார் 1 அணைக்கு 67 கனஅடியும், சிற்றார் 2 அணைக்கு 108 கன அடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 7 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து 123 கன அடி தண்ணீர் பாசனத்துக்காக திறந்து விடப்பட்டது.

Next Story