1 மணி நேரம் பலத்த மழை


1 மணி நேரம் பலத்த மழை
x
தினத்தந்தி 14 May 2021 1:22 AM IST (Updated: 14 May 2021 1:22 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் நேற்று 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

சிவகாசி, 
சிவகாசியில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான வெயில் இருந்து நிலையில் நேற்று மதியம் 3 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதனால் சிவகாசி, திருத்தங்கல் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமப்பகுதியில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. மாலை முதல் இரவு வரை குளிர்ந்த காற்று வீசியது.  1 மணி நேரம் பெய்த பலத்த மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். மே, ஜூன் மாதங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் இதுபோன்ற மழை அவ்வப்போது பெய்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் தெரிவித்தனர்.


Next Story