கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 14 May 2021 1:25 AM IST (Updated: 14 May 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட அயன்நத்தம்பட்டி ஊராட்சியில் வத்திராயிருப்பு ஒன்றிய தலைவர் சிந்து முருகன் தலைமையில் ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமினை முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் ஜெயராமன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு குறித்தும், நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதும் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசி, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் கோவிந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story