டிரைவரை தாக்க முயன்றவர் கைது


டிரைவரை தாக்க முயன்றவர் கைது
x
தினத்தந்தி 14 May 2021 1:28 AM IST (Updated: 14 May 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

டிரைவரை தாக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள கடுகூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 42). இவர், சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். தற்போது கொரோனா பரவல் காரணமாக ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் ரேஷன் கடை அருகே சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வனின் மகன் தமிழ்மாறன் (24) என்பவர், ராஜாவை வழிமறித்து, கட்டையால் தாக்க முயன்றதுடன், தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜா கொடுத்த புகாரின் பேரில், கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்மாறனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story