தேங்கும் கழிவுநீரால் சுகாதார கேடு
நல்லறிக்கை கிராமத்தில் காலனி பகுதியில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. அதனை சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குன்னம்:
சுகாதார சீர்கேடு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காடூர் ஊராட்சியில் உள்ள நல்லறிக்கை கிராமத்தில் காலனி பகுதியில் 4 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். காலனி பகுதியில் உள்ள வடக்கு தெரு, நடுத்தெரு ஆகிய தெருக்களில் கடந்த ஒரு வருட காலமாக தேங்கியுள்ள சாக்கடை நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
வடக்கு தெருவில் உள்ள சாக்கடையின் மேல் பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு, அதில் பொது வினியோக குடிநீர் குழாய் பொருத்தப்பட்டு உள்ளது. அதில் அருகில் உள்ள சாக்கடையின் அருகே அமர்ந்துதான் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க வேண்டும்.
சீர் செய்ய கோரிக்கை
அதேபோல் சாக்கடை சுத்தம் செய்யப்படாமல், கழிவுநீர் தேங்கி உள்ளது. மேலும் சாக்கடை சுத்தம் செய்யப்பட்டாலும், சாக்கடையில் உள்ள குப்பைகளை அள்ளி அருகிலேயே கொட்டி விடுகிறார்கள். இதனால் மீண்டும் சாக்கடையில் குப்பைகள் விழுந்து விடுகிறது. தெருவில் தேங்கி உள்ள சாக்கடை கழிவுநீரில் பன்றிகள் படுத்து அசுத்தமும் செய்கின்றன.
எனவே நல்லரிக்கை காலனி பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க, சாக்கடையில் கழிவுநீர் தேங்காமல் செல்லும் வகையில் சீர் செய்து தர வேப்பூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story