பொதுமக்களுக்கு முககவசம் வழங்கிய போலீசார்


பொதுமக்களுக்கு முககவசம் வழங்கிய போலீசார்
x
தினத்தந்தி 14 May 2021 1:28 AM IST (Updated: 14 May 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களுக்கு முககவசத்தை போலீசார் இலவசமாக வழங்கினர்.

மீன்சுருட்டி:
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தினமும் மதியம் 12 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் கடைகளை மட்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மீன்சுருட்டி அருகே ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையில் நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் சடகோபன் மற்றும் போலீசார், அந்த வழியாக முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்தவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கி, கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, மீண்டும் முககவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினர்.

Next Story