பத்திரப்பதிவின் போது கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது


பத்திரப்பதிவின் போது கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது
x
தினத்தந்தி 14 May 2021 1:33 AM IST (Updated: 14 May 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

பத்திரப்பதிவு அலுவலகங்களில் வழிகாட்டி மதிப்பை விட பத்திர பதிவிற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என பதிவுத்துறை தலைவர் அனைத்து பத்திரப்பதிவு துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

விருதுநகர், 
பத்திரப்பதிவு அலுவலகங்களில் வழிகாட்டி மதிப்பை விட பத்திர பதிவிற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என பதிவுத்துறை தலைவர் அனைத்து பத்திரப்பதிவு துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இடைத்தரகர் 
இதுகுறித்து பத்திர பதிவு துறை தலைவர் பி.சங்கர் அனைத்து பதிவாளர் மற்றும் சார் பதிவாளருக்கு அனுப்பியுள்ள அறிவுறுத்தலில் கூறியிருப்பதாவது:- 
பத்திரப்பதிவுக்கு வருவோரிடம் சார் பதிவாளர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு சந்தேகங்களை தீர்க்க வேண்டும். இடைத்தரகர் தலையீட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.
 நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரப்பதிவின்போது இணையதளத்தில் உள்ள வழிகாட்டி மதிப்பை கடைபிடிக்கவேண்டும்.
இணையதளம் 
 எக்காரணத்தைக் கொண்டும் அருகில் உள்ள சர்வே எண்ணில் அல்லது சம்பந்தப்பட்ட சபையின் உட்பிரிவின் அதிக மதிப்பையோ அல்லது உயர்மதிப்பையோ கடைபிடிக்க வலியுறுத்தக்கூடாது.
 வழிகாட்டு மதிப்பு இணையதளத்தில் தவறுதலாக இருப்பின் உடன் பதிவுத்துறை தலைவருக்கு உரிய பரிந்துரைகளை அனுப்பி அதை சரிப்படுத்த வேண்டும். அதில் தவறும் மாவட்ட பதிவாளர் துறைத்தலைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பல சர்வே எண்களில் மதிப்பீடு மேலும் பல சர்வே எண்களில் கட்டுப்பட்ட சொத்து ஒரே நான்கு எல்லைக்குள் எழுதப்பட்டிருப்பின் பதிவு அலுவலர்கள் அந்தந்த சர்வே எண்கள் உட்பிரிவிற்கு உரிய வழிகாட்டி மதிப்பீட்டை கணக்கிட்டு கடைபிடித்தால் போதுமானதாகும்.
அறிவுறுத்தல்
 ஆவணத்தில் தொழிற்சாலை ஏதேனும் இருப்பின் அக்கட்டிடம் உள்ள சர்வே எண் உட்பிரிவு மட்டும் உரிய மதிப்பெண் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
 கட்டிடம் உள்ள சர்வே எண்களை தவிர்த்து மீதமுள்ள சர்வே எண் அல்லது உட்பிரிவுகளுக்கு வழிகாட்டியில் உள்ள விவசாய மதிப்பையே கடைபிடிக்க வேண்டும். இதை கண்காணிக்காத மாவட்ட பதிவாளர், நிர்வாகம், தணிக்கை மற்றும் துணை பதிவுத்துறைத்தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 அமைச்சர் அறிவுறுத்தியுள்ளபடி பதிவு துறை அலுவலர்கள் எவ்விதப்புகாருக்கும் இடமின்றி வெளிப்படைத்தன்மையுடன் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
 இவ்வாறு பத்திர பதிவு துறை தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

Next Story