வடகாடு பகுதிக்கு வந்த அரிய வகை ஆந்தை


வடகாடு பகுதிக்கு வந்த அரிய வகை ஆந்தை
x
தினத்தந்தி 14 May 2021 1:34 AM IST (Updated: 14 May 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

வடகாடு பகுதிக்கு அரிய வகை ஆந்தை வந்தது

வடகாடு
வடகாடு அருகேயுள்ள புள்ளான்விடுதி கடைத்தெரு பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு அரிய வகை ஆந்தை ஒன்று வந்தது. அந்த ஆந்தையால் பறக்க முடியாமல் தவித்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதனை மீட்டு ஒரு கூண்டுக்குள் வைத்து பாதுகாத்தனர். இந்த அரிய வகை ஆந்தையை பார்க்க நேற்று காலை பொதுமக்கள் திரண்டனர். பின்னர் கூண்டில் இருந்து திறந்து விடப்பட்டஆந்தை பறந்து சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த அரிய வகை ஆந்தை வெளிநாட்டை சேர்ந்தது என்று கூறப்படுகிறது.


Next Story