மணமேல்குடி கடைவீதியில் பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம்
மணமேல்குடி கடைவீதியில் பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியது
மணமேல்குடி
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன்கருதி காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை குளிர்சாதன வசதி அல்லாத மளிகை கடைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட கடைகள் செயல்பட அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த நேரங்களில் கடைகளுக்கு செல்லும் பொதுமக்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், மணமேல்குடி கடைவீதியில் நேற்று பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியது. அவர்களில் பலர் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் பொருட்கள் வாங்கியதை காண முடிந்தது. மேலும், மணமேல்குடி மீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சிலர் மீன் வாங்கி சென்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story