வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தனிமை காலம் முடிந்ததும் கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் பெற்றுக்கொள்ளலாம்; அதிகாரிகள் தகவல்
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தனிமை காலம் முடிந்ததும் கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் பெற்றுக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தனிமை காலம் முடிந்ததும் கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் பெற்றுக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா நிவாரண நிதி
தமிழக முதல் - அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார். முதல் கட்டமாக இந்த மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். இதற்கான டோக்கன் கடந்த 10-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ரேஷன் கடைகளில் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் கொரோனா நிவாரண தொகைக்கான டோக்கன்கள் வீடு வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கி வருகின்றனர்.
சிக்கல்
ஆனால் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள வீடுகளில் எப்படி டோக்கன் வழங்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் அச்சத்தில் அந்த வீடுகளுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநகர் பகுதியில் ஏராளமானோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இப்படி தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவர்களுக்கு கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்குவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
2,117 பேர் தனிமை
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 1,152 ரேஷன் கடைகள் மூலம் 7 லட்சத்து 13 ஆயிரத்து 910 அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். கடந்த 10-ந் தேதி முதல் வீடுகளுக்கு சென்று டோக்கன்கள் வினியோகித்து வருகிறோம்.
இந்தநிலையில் மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் நிலவரப்படி 2 ஆயிரத்து 117 பேர் கொரோனா தொற்று பரவல் காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் வெளியில் வரக்கூடாது. ரேஷன் கடை ஊழியர்களும் அங்கு செல்லமுடியாது. எனவே தனிமைப்படுத்தப்பட்டு உள்ள வீடுகளில் உள்ளவர்கள் தங்களின் தனிமை காலம் முடிந்தபின் ரேஷன் கடைக்கு வந்து கொரோனா நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story