புஞ்சைபுளியம்பட்டியில் பொதுமக்கள்- வியாபாரிகள் வராததால் வெறிச்சோடிய வாரச்சந்தை


புஞ்சைபுளியம்பட்டியில்  பொதுமக்கள்- வியாபாரிகள் வராததால் வெறிச்சோடிய வாரச்சந்தை
x
தினத்தந்தி 14 May 2021 2:08 AM IST (Updated: 14 May 2021 2:08 AM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வராததால் வாரச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வராததால் வாரச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. 
வாரச்சந்தை
புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் 25 ஏக்கர் பரப்பளவிலான வாரச்சந்தை அமைந்து உள்ளது. தமிழகத்தில் பொள்ளாச்சி சந்தைக்கு அடுத்தபடியாக உள்ள 2-வது பெரிய சந்தையாக புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை விளங்குகிறது. இந்த சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை பொது சந்தையும், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கால்நடை சந்தையும் நடைபெறுவது வழக்கம். 
பொது சந்தையில் மளிகை, காய்கறி, பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்கள் விற்பனை நடைபெறும். 
வெறிச்சோடியது
ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இந்த சந்தைக்கு வருவார்கள். 
கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு விதித்த கட்டுப்பாட்டின்படி புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கம்போல் நேற்று வாரச்சந்தை கூடியது. ஆனால் வியாபாரிகள் குறைந்த அளவிலேயே வந்து கடை அமைத்திருந்தனர். இதேபோல் பொதுமக்களும் குறைந்த அளவிலேயே வந்திருந்தனர். மேலும் மாட்டுச்சந்தையும் நடந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் யாரும் வரவில்லை. உள்ளூர் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மட்டுமே சந்தைக்கு வந்திருந்தனர். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வருகை குறைந்து காணப்பட்டதால் புஞ்சைபுளியம்பட்டி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. 

Next Story