ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி; புதிதாக 910 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் நேற்று புதிதாக 910 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் நேற்று புதிதாக 910 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
910 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக 900-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் புதிதாக 910 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 254 ஆக உயர்ந்தது.
2 பேர் பலி
இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 64 வயது ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த மாதம் 27-ந்தேதி கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் இறந்தார்.
இதேபோல் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 55 வயது ஆண் கொரோனாவுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இவரும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 180 ஆக உயர்ந்தது.
5,142 பேர் சிகிச்சை
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 580 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 24 ஆயிரத்து 932 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.
மேலும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது தொற்று உள்ள 5 ஆயிரத்து 142 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூரை அடுத்த கொளத்துப்பாளையம், கொளாநல்லி ஊராட்சி மற்றும் கருமாண்டம்பாளையம், ஊஞ்சலூர் பரிசல் துறை, பாசூ்ா ஆகிய பகுதிகளில் சளி மற்றும் காய்ச்சல் அறிகுறி தென்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் கொளத்துப்பாளையம் ஊராட்சியில் 81 வயது மற்றும் 70 வயது உள்ள 2 ஆண்கள், கொளாநல்லி ஊராட்சிக்கு உள்பட்ட நத்தக்காட்டூரில் 33 வயது உள்ள ஆண் ஒருவர், பாசூரில் 25 வயது உள்ள ஆண் ஒருவர், கருமாண்டபாளையத்தில் 27 வயது உள்ள ஆண் ஒருவர், ஊஞ்சலூர் பரிசல் துறை வீதியை சேர்ந்த 68 வயது உள்ள பெண், 67 மற்றும் 27 வயது உள்ள ஆண்கள் 2 பேர், ஒரு வயது உள்ள ஆண் குழந்தை என மாெத்தம் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நம்பியூர்
நம்பியூர் காந்திபுரத்தை சேர்ந்த 34 வயது ஆண், 35 வயதுடைய ஆண், ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த 19 வயதுடைய ஆண், 44 வயதுடைய பெண், கோவை ரோட்டை சேர்ந்த 52 வயது ஆண், சி.எஸ்.ஐ. வீதியை சேர்ந்த 55 வயது பெண், கொன்னமடையை சேர்ந்த 34 வயது பெண், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த 40 வயது பெண், கெடாரையை சேர்ந்த 28 வயது பெண், காமராஜ் நகரை சேர்ந்த 25 வயது ஆண், 35 வயதுடைய பெண் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதேபோல் எலத்தூர் பேரூராட்சியில் கேங்குழியை சேர்ந்த 50 வயதுடைய பெண், 21 வயதுடைய பெண், பள்ளத்தூர் காலனியை சேர்ந்த 56 வயதுடைய ஆண், பொலவபாளையம் ஊராட்சியில் குமரன் கார்டனில் 53 வயதுடைய ஆண், 47 வயதுடைய பெண், கூடக்கரை ஊராட்சியில் மாரியம்மன் கோவில் வீதியில் 34 வயதுடைய ஆண், அஞ்சனூர் ஊராட்சியில் இருகாலூரில் 49, 55 வயதுடைய 2 ஆண்கள், 27, 62 வயதுடைய 2 பெண்கள், கொமரபாளையத்தில் 46 வயதுடைய ஆண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
மேலும் ஆண்டிபாளையம் பேரூராட்சியில் சாணார்புதூரை சேர்ந்த 59 வயது ஆண் மற்றும் 35, 48 வயதுடைய 2 பெண்கள், குருமந்தூர் ஊராட்சியில் ராஜா வீதியில் 51 வயதுடைய பெண், கோவை ரோட்டில் 40 வயதுடைய பெண் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story