சேலம் மாவட்டத்தில் புதிய உச்சமாக 763 பேருக்கு கொரோனா 6 பேர் பலி


சேலம் மாவட்டத்தில் புதிய உச்சமாக 763 பேருக்கு கொரோனா 6 பேர் பலி
x
தினத்தந்தி 14 May 2021 2:36 AM IST (Updated: 14 May 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு புதிய உச்சமாக 763 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் கொரோனாவுக்கு 6 பேர் பலியாகினர்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு புதிய உச்சமாக 763 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் கொரோனாவுக்கு 6 பேர் பலியாகினர்.
763 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு உயிரிழப்புகளும் அதிகமாக ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 664 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 763 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 407 பேர், வீரபாண்டியில் 43 பேர், எடப்பாடியில் 38 பேர், சேலம் ஒன்றியம், பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 35 பேர், ஓமலூரில் 34 பேர், சங்ககிரி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 22 பேர், தாரமங்கலத்தில் 18 பேர், மகுடஞ்சாவடி, வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 15 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 13 பேர், மேட்டூர், மேச்சேரி ஆகிய பகுதிகளில் தலா 12 பேர், கொங்கணாபுரத்தில் 11 பேர், நங்கவள்ளியில் 7 பேர், கொளத்தூர், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா 6 பேர், தலைவாசலில் 4 பேர், ஏற்காடு, காடையாம்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
49 ஆயிரத்தை தாண்டியது
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 371 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 479 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 4 ஆயிரத்து 115 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கட்டுப்படுத்த பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
6 பேர் பலி
சேலத்தை சேர்ந்த 27, 55, 61, 63 ஆகிய வயதுடைய பெண்களும், 40, 67 ஆகிய வயதுடைய ஆண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக இறந்தனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 638 ஆக அதிகரித்து உள்ளது.

Next Story