பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை
திருப்பூர் பழைய பஸ் நிலைய பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் இதனை தடுக்கும் வகையில் கொரோனா பரிசோதனையையும் சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் என பல இடங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இருப்பினும் பொதுமக்கள் பலர் கூட்டம் அதிகமாக இருப்பதால், அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்ல தயக்கம் காட்டி வருகிறார்கள். அதனை போக்கும் வகையில் வாகனங்களில் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில் நேற்று திருப்பூர் பழைய பஸ் நிலைய பகுதிகளில் வாகனத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பலர் பரிசோதனை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story