போலீசாருக்கு கொரோனா பராமரிப்பு மையம்


போலீசாருக்கு கொரோனா பராமரிப்பு மையம்
x
தினத்தந்தி 14 May 2021 3:31 AM IST (Updated: 14 May 2021 3:31 AM IST)
t-max-icont-min-icon

ஆயுதப்படை அலுவலகத்தில் போலீசாருக்கு கொரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்
திருப்பூர் மாவட்ட காவல்துறையில் 35 பேரும், திருப்பூர் மாநகர காவல் துறையில் 41 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் அறிவுறுத்தலின்படி மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் கொரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 20 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.
ஆண்களுக்கு 10 படுக்கை வசதிகளும், பெண்களுக்கு 10 படுக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த போலீசாரை தனிமைப்படுத்தி இருக்கும் வகையில் இந்த கொரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் இந்த மையத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்படும் பட்சத்தில் திருப்பூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Next Story