தனியார் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு
தனியார் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையொட்டி படுக்கை வசதிகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி கோத்தகிரி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க நீலகிரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோ ரஞ்சிதம்,
ஊட்டி உதவி கலெக்டர் மோனிகா ராணா, குன்னூர் உதவி கலெக்டர் ரஞ்சித் சிங், கோத்தகிரி தாசில்தார் கிருஷ்ண மூர்த்தி, சுகாதார ஆய்வாளர் ரஞ்சித், வருவாய் ஆய்வாளர் தீபக் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
மேலும் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ததுடன், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
Related Tags :
Next Story