வாணியம்பாடியில் விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்ட 7 கடைகளுக்கு ‘சீல்’
வாணியம்பாடியில் விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்ட 7 கடைகளுக்கு ‘சீல்’.
வாணியம்பாடி,
வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதியில் தொடர்ந்து கொரோனா தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. பலர் இறப்புக்கு உள்ளாகின்றனர். இதனை அடுத்து மாவட்ட கலெக்டர் சிவன்அருள் உத்தரவின் பேரில், வாணியம்பாடியில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில், நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வர் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம் உள்ளிட்ட காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சி.எல்.சாலை, பஷீராபாத், மலங்ரோடு, ஜாப்ராபாத் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அரசு அறிவித்த நேரத்தை கடந்தும், முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இயங்கிய டீக்கடை, சுவீட் கடை, இறைச்சி கடை உள்ளிட்ட 7 கடைகளுக்கு சீல் வைத்து அபராதம் விதித்தனர். மேலும் முக கவசம் அணியாமல், தேவை இல்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த இளைஞர்களை நிறுத்தி அபராதம் விதித்தும், காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் அனுப்பினர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, மற்றும் வருவாய் துறையினர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story