ஆலந்தூர் பகுதியில் தேவை இன்றி மோட்டார் சைக்கிளில் சுற்றிய 100 பேர் மீது வழக்கு


ஆலந்தூர் பகுதியில் தேவை இன்றி மோட்டார் சைக்கிளில் சுற்றிய 100 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 14 May 2021 3:33 PM IST (Updated: 14 May 2021 3:33 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பகல் 12 மணி வரை காய்கறி, மளிகை, பழ, இறைச்சி கடைகள் திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடைகளுக்கு வருபவர்கள் மோட்டார் சைக்கிளில் வராமல் நடந்து வந்து பொருட்களை வாங்கி செல்ல போலீசார் அறிவுறுத்தினார்கள். ஆனால் பகல் 12 மணிக்கு பின்னரும் ஆலந்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் தேவை இல்லாமல் இளைஞர்கள் ஊர் சுற்றுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பரங்கிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் ஆலந்தூர், பரங்கிமலை சுரங்கப்பாதை அருகே திடீரென போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், முக்கிய தேவைகள் எதுவுமில்லாமல் ஊர் சுற்றியும் வந்த 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அனுப்பி ைவக்கப்பட்டனர்.

போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஆலந்தூர், பரங்கிமலை பகுதியில் தேவையின்றி சுற்றும் வாகனங்களின் எண்ணிக்கை தடுக்கப்பட்டது.

Next Story