கொரோனா நிவாரண பணிக்கு ரூ.1,000 நன்கொடையளித்த சிறுவன்


கொரோனா நிவாரண பணிக்கு ரூ.1,000 நன்கொடையளித்த சிறுவன்
x
தினத்தந்தி 14 May 2021 4:38 PM IST (Updated: 14 May 2021 4:38 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.

இதனை அறிந்த காஞ்சீபுரம் ரங்கசாமி குளம் பகுதி நாகலூத்து தெருவில் வசிக்கும் கார்த்திக் என்பவரது மகன் ரோஹித் (வயது 6) தான் சேமித்து வைத்திருந்த ரூ.1,000-த்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இணையதளத்தின் வாயிலாக செலுத்தினான். 1-ம் வகுப்பு படித்து வரும் சிறுவன் ரோஹித்தின் மனித நேயத்தை சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள் பலரும் பாராட்டினர்.

Next Story