தனியார் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


தனியார் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 14 May 2021 4:53 PM IST (Updated: 14 May 2021 4:53 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே தனியாருக்கு சொந்தமான பிளைவுட் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இங்கு பணி நிரந்தரம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் 5 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், முறையான ஊதிய உயர்வு வழங்கிட கோரியும் அனைத்து தொழிலாளர்கள் சங்கத்தினர், தொழிற்சாலையில் வேலை எதுவும் செய்யாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி தாசில்தார் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனுவை தொழிலாளர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

Next Story