திருப்பூரில் பூக்கள் விற்பனை மும்முரம்


திருப்பூரில் பூக்கள் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 14 May 2021 5:28 PM IST (Updated: 14 May 2021 5:28 PM IST)
t-max-icont-min-icon

ரம்ஜான், அட்சய திருதியையொட்டி திருப்பூரில் பூக்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

திருப்பூர்
ரம்ஜான், அட்சய திருதியையொட்டி திருப்பூரில் பூக்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
ரம்ஜான் அட்சய திருதி
பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் பூக்களுக்கு எப்போதும் ஒரு பங்கு உண்டு. அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் பூக்களின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. இதன் காரணமாக முக்கிய நாட்களில் சந்தைகளில் பூக்கள் வாங்க பொதுமக்கள் குவிந்து வருவார்கள்.
இந்த நிலையில் நேற்று ரம்ஜான் பண்டிகை மற்றும் அட்சய திருதி ஆகிய முக்கிய பண்டிகைகள் என்பதால், திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை மும்முரமாக நடந்தது. ஏராளமானவர்கள் பூக்களை வாங்கி சென்றனர்.
பூக்கள் விற்பனை
இது குறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது
ரம்ஜான் மற்றும் அட்சய திருதி என்பதால் பூக்கள் வாங்க காலையில் இருந்தே சந்தைக்கு பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்தனர். விற்பனையும் நன்றாக இருந்தது. ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் காரணமாக பூக்களின் விலையும் கடந்த சில நாட்களாகவே சராசரியாக இருந்து வருகிறது.
இந்நிலையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 200க்கும், பிச்சிப்பூ ரூ.240க்கும், முல்லை ரூ.120க்கும், சம்பங்கி ரூ.40க்கும், கனகாம்பரம் ரூ.120க்கும், அரளி ரூ.30க்கும் என விற்பனை செய்யப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுபோல் ரம்ஜான் மற்றும் அட்சய திருதியையொட்டி தென்னம்பாளையத்தில் உள்ள மீன் சந்தைக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
------
படங்கள் உண்டு...
----------
Reporter : S.Thiraviya Raja  Location : Tirupur - Tirupur

Next Story