வந்தவாசி அருகே கொரோனாவுக்கு 5 மாத கர்ப்பிணி பலி


வந்தவாசி அருகே கொரோனாவுக்கு 5 மாத கர்ப்பிணி பலி
x
தினத்தந்தி 14 May 2021 6:37 PM IST (Updated: 14 May 2021 6:37 PM IST)
t-max-icont-min-icon

வந்தவாசி அருகே கொரோனாவுக்கு 5 மாத கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார்.

வந்தவாசி

கர்ப்பிணி பலி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கடைசிகுளம் கிராமத்தில் 5 மாத கர்ப்பிணி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். மேலும் அவருக்கு கொரோனா தொற்றின் அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மேல்மருத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ெதாற்று உறுதி செய்யப்பட்டது. 

இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். 

பரிசோதனை

கொரோனாவுக்கு கர்ப்பிணி பலியானதை அறிந்த கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின்பேரில் கடைசிகுளம் கிராமத்தில் தூய்மை பணி நடந்தது. அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. 
வழூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் மணிமேகலை, ஆனந்தன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கடைசிகுளம் கிராமத்துக்கு வந்து கொரோனா பரிசோதனை முகாமை நடத்தினர். இந்த முகாமில் கிராம மக்களுக்கு சளி மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டது. 

மேலும் டாக்டர் மணிமேகலை கிராம மக்களுக்கு கொரோனா பரவலை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கொரோனாவுக்கு கர்ப்பிணி இறந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story