ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது நிரந்தரமாக உள்ளது. அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது நிரந்தரமாக உள்ளது என்றும் 2 நாட்களில் பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர்
வரவேற்பு
காட்பாடி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. துரைமுருகன் தமிழக நீர்பாசனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக வேலூருக்கு நேற்று வருகை தந்தார். சென்னையில் இருந்து காரில் வந்த அமைச்சர் துரைமுருகனுக்கு வேலூர் அண்ணாசாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், டி.ஐ.ஜி. காமினி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் (பொறுப்பு), கதிர்ஆனந்த் எம்.பி., கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதிவாணன், பாலாஜி, வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன், உதவி கலெக்டர்கள் சேக்மன்சூர், கணேஷ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு பூங்கொத்து, பழங்கள் கொடுத்து வரவேற்றனர்.
ஆக்சிஜன் பற்றாக்குறை
பின்னர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், வேலூர் மாவட்டத்தின் கொரோனா நிலவரம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் பேசி வருகிறேன். நேற்று கூட ஆக்சிஜன் தேவை என கேட்டார்கள் அதை அனுப்பி வைத்தோம். அது இரவுக்குள் காலியாகிவிட்டதாக கூறி மீண்டும் கேட்டார்கள். 2-வது முறையாகவும் ஆக்சிஜன் அனுப்பியுள்ளோம்.
இதுபோதிய அளவுக்கு உள்ளதா? என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது. காரணம் வேலூரை பொறுத்தரை 100 நோயாளிக்கு ஆக்சிஜன் அனுப்பினால் அது சென்றடைவதற்குள் 150 நோயாளிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆகவே ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது நிரந்தரமாக உள்ளது. இந்த பிரச்சினை 2 நாட்களில் தீர்க்கப்படும். மத்திய அரசிடமும் ஆக்சிஜன் கேட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story