கொரோனா ஊரடங்கால் வீடுகளில் முஸ்லிம்கள் ரம்ஜான் தொழுகை


கொரோனா ஊரடங்கால் வீடுகளில் முஸ்லிம்கள் ரம்ஜான் தொழுகை
x
தினத்தந்தி 14 May 2021 8:33 PM IST (Updated: 14 May 2021 8:33 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கால் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் வீடுகளில் தொழுகை நடத்தினர்.


திண்டுக்கல்:
முஸ்லிம்களின் பண்டிகைகளில் முக்கியமானது ரம்ஜான் ஆகும். இந்த ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புனிதமான ரமலான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு மேற்கொண்டனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசலில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம். ஆனால், கொரோனா பரவலால் ஊரடங்கு அமலில் இருக்கிறது.
இதனால் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மக்கள் வழிபாடு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரம் வழக்கமான வழிபாடுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே, பள்ளிவாசல்களில் வழக்கம் போல் தொழுகை நடந்தது. ஆனால், ஊரடங்கு காரணமாக முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்கு செல்லாமல், தங்களுடைய வீடுகளிலேயே தொழுகை நடத்தும் சூழல் ஏற்பட்டது.
 வீடுகளில் தொழுகை 
அதன்படி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று முஸ்லிம்கள், தங்களுடைய வீடுகளிலேயே ரம்ஜான் தொழுகை மேற்கொண்டனர். இதில் பலர் வீட்டின் மொட்டை மாடியில் தொழுகை நடத்தினர். அதன்பின்னர் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மேலும் வீடுகளில் உணவு தயாரித்து பிறருக்கு கொடுத்து மகிழ்ந்தனர். கடந்த ஆண்டும் ரம்ஜான் பண்டிகையின் போது ஊரடங்கு அமலில் இருந்ததால், வீடுகளில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story