பிரதான சாலைகளை அடைத்த போலீசார்
தாராபுரத்தில் ஊரடங்கை மீறி பொதுமக்கள் சுற்றி திாிந்ததால் பிரதான சாலைகளை போலீசார் அடைத்தனர். தேவையில்லாமல் சுற்றி திரிந்தவர்களை வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
தாராபுரம்
தாராபுரத்தில் ஊரடங்கை மீறி பொதுமக்கள் சுற்றி திாிந்ததால் பிரதான சாலைகளை போலீசார் அடைத்தனர். தேவையில்லாமல் சுற்றி திரிந்தவர்களை வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவல் முழுஊரடங்கு காரணமாக மளிகை, காய்கறி கடைகளுக்கு மதியம் 12 மணி வரையிலும், பால் மற்றும் மருந்து கடைகளுக்கு இரவு வரையிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் தாராபுரத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் பகல் 12 மணி வரை வெளியே சென்று வந்தனா்.
இந்த நிலையில் பலா் காரணம் ஏதுமின்றி வெளியில் சுற்றித்திாிந்தனா். அதுபோன்று தாராபுரத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் தாராபுரம் நகருக்கு வந்து சென்றனா். இதனால் நகாில் கடைவீதி, பொள்ளாச்சி ரோடு, பஸ்நிலையம், தாலுகா அலுவலகம், 5 காா்னா் உள்பட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது அவா்கள் மளிகை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகளில் சமூக இடைவெளி இன்றி கூடினா்.
தாராபுரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுவதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த பல ஜவுளி கடைகள், நகைகடைகள், பேன்சிகடைகள்மற்றும் நிதி நிறுவனங்கள் அரசு விதிமுறைகளை மீறி செயல்பட ஆரம்பித்தன. அதனைஅறிந்த அதிகாாிகள் சம்பந்தப்பட்ட கடைகள் மீது உாிய நடவடிக்கை எடுத்தனா். இருப்பினும் நகாில் காலை முதல் மதியம் வரை பொதுமக்கள் நடமாட்டம் அதிகமானதால் கொரோனா தொற்று வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டது.
சாலையில் தடுப்பு
இந்தநிலையில் தமிழக அரசு ஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக்க அதிகாாிகளுக்கு உத்தரவிட்டது. அதைத் தொடா்ந்து நேற்று தாராபுரத்தில் இருந்து கரூா்செல்லும் ரோட்டில் உள்ள அமராவதி பழைய ஆற்று பாலத்தில் போலீசாா் தடுப்புகளை ஏற்படுத்தி போக்குவரத்தை தடைசெய்தனா். அதுபோன்று பழமையான இரும்பு பாலமும் அடைக்கப்பட்டது. இதனால் மூலனூா், கொளத்துப்பாளையம், கரையூா், பெரமியம், மீனாட்சிபுரம், உப்புத்துறைபாளையம், கணபதிபாளையம், கொளிஞ்சிவாடி உள்பட பல்வேறு பகுதிகளைசோ்ந்த பொதுமக்கள் தாராபுரம் நகருக்குள் வரமுடியாமல் போனது.
அதுபோன்று அந்த பகுதிகளில் இருந்து காலையில் நகருக்குள் வந்தவா்கள் பைபாஸ் ரோடுவழியாக 5 கிலோ மீட்டா் தூரம் சுற்றிக்கொண்டு தங்கள் பகுதிகளுக்கு சென்றனா். அதுபோன்று தாராபுரத்தில் இருந்து உடுமலை செல்லும் சாலையும் அடைக்கப்பட்டது. மேலும் அடைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நகாின் முக்கியஇடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வெளியில்சுற்றிக்கொண்டு இருந்தவா்களை பிடித்து போலீசாா் எச்சாித்து அனுப்பினா்.
Related Tags :
Next Story