இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தியதால் நாகூர் தர்கா வெறிச்சோடியது
ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினர். இதனால் நாகூர் தர்கா நேற்று வெறிச்சோடியது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
நாகூர்:
ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினர். இதனால் நாகூர் தர்கா நேற்று வெறிச்சோடியது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
ரம்ஜான் பண்டிகை
இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகையை விமரிசையாக கொண்டாடி மகிழ்வார்கள். கடந்த ஆண்டு(2020) கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரம்ஜான் பண்டிகை எளிமையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவால் பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களில் கூட்டமாக கூடி தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ரம்ஜான் பண்டிகையன்று நாகை மாவட்டம் நாகூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்காவில் ஏராளமான இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி தொழுகை நடத்துவார்கள். பின்னர் உறவினர்களும், நண்பர்களும், வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள்.
வெறிச்சோடிய நாகூர் தர்கா
கொரோனா ஊரடங்கு காரணமாக ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று நாகூர் பகுதியை சோந்்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேேய தொழுகை நடத்தினர். இதனால் நாகூர் தர்கா பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.
நாகூர் தர்காவின் கால்மாட்டு வாசலில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வர சிலர் சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர். ரம்ஜான் பண்டிகையில் நாகூர் தர்காவில் நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனை, விளக்கவுரை, துவா, பாத்திஹா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.
இதேபோல் நாகை மாவட்டத்தில் அனைத்து பள்ளிவாசல்கள், தர்காக்கள் மூடப்பட்டதால் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்.
Related Tags :
Next Story