காற்றில் பறந்த ஊரடங்கு விதிகள் திண்டுக்கல்லில் பொருட்கள் வாங்க அலைமோதும் மக்கள்


காற்றில் பறந்த ஊரடங்கு விதிகள் திண்டுக்கல்லில் பொருட்கள் வாங்க அலைமோதும் மக்கள்
x
தினத்தந்தி 14 May 2021 9:39 PM IST (Updated: 14 May 2021 9:39 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கு விதிகளை காற்றில் பறக்க விடும் வகையில் திண்டுக்கல்லில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க கடைகளில் அலைமோதுகின்றனர்.

திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கு முதலில் இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் கொரோனா பரவல் குறையவில்லை. இதனால் கடந்த 10-ந்தேதி முதல் முழுஊரடங்கு அமலுக்கு வந்தது. ஆனால், மக்களின் அத்தியாவசிய தேவையை கருதி மளிகை, காய்கறி, இறைச்சி, மருந்து கடைகள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படுகின்றன. அதேநேரம் பொருட்கள் வாங்குவதற்கு அடிக்கடி கடைக்கு வருவதை தவிர்த்து மொத்தமாக வாங்கி வைத்து கொள்ள வேண்டும். தேவையின்றி வெளியே நடமாடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். வெளியே வரும்போது முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால், திண்டுக்கல்லில் சிலர் ஊரடங்கு விதிகளை காற்றில் பறக்க விடும் வகையில் சுற்றித்திரிகின்றனர். மேலும் மளிகை, காய்கறி கடைகளுக்கு மக்கள் தினமும் வந்து பொருட்களை வாங்குகின்றனர்.
இதனால் திண்டுக்கல்லில் மெயின்ரோடு, கடைவீதிகள், ரதவீதிகள், நாகல்நகர் சந்தைபேட்டை உள்பட முக்கிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதில் பலர் சமூக இடைவெளியை கடைபிடிப்பது இல்லை. அதிலும் சிலர் முககவசம் அணியாமல் வருகின்றனர். அதோடு கடைகளுக்கு சிறுவர்களையும் அழைத்து வருகின்றனர். இதனால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, மக்கள் ஊரடங்கு விதிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story