பெரியகுளம் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. ஆய்வு


பெரியகுளம் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 14 May 2021 9:47 PM IST (Updated: 14 May 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை குறித்து சரவணகுமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

தேனி: 

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. 

இதற்கிடையே எம்.எல்.ஏ.க்கள் தங்களின் தொகுதிகளில் நோய் தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். 

அதன்படி, பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ. சரவணகுமார், பெரியகுளத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

 அப்போது தினந்தோறும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை குறித்தும், கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள், நோயாளிகளுக்கு படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதிகள் குறித்தும் மருத்துவமனை இணை இயக்குனர் லட்சுமணனிடம் கேட்டறிந்தார். 


அதன்பிறகு சோத்துப்பாறை அணை நகராட்சி சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பெரியகுளம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வழங்கப்படும் தண்ணீர் எவ்வாறு சுத்திகரிக்கப்பட்டு செல்கிறது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். 


இந்த ஆய்வின்போது நகராட்சி உதவி பொறியாளர் சண்முகவடிவு மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story