அடிப்படை வசதி கேட்டு கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம் விருத்தாசலத்தில் பரபரப்பு
கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்
விருத்தாசலம்,
விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கல்லூரி கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ள 2 கட்டிடங்களில் 250-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரு கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நோயாளிகள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று தங்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. ஆகவே தங்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்கக்கோரி கண்டன கோஷம் எழுப்பியபடி கல்லூரி வளாகத்தில் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு பணிபுரியும் மருத்துவ குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உடனடியாக செய்யப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்ற நோயாளிகள் போராட்டத்தை கைவிட்டு, தங்களது அறைகளுக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story