சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சோழவந்தான்,மே.
சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காட்டுராஜா மகன் செல்லப்பாண்டி (வயது 23). இவருக்கும், உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். 
காடுபட்டி கிராமத்தில் செல்லப்பாண்டி அந்த சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்தார். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சாந்தி காடுபட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை செய்து சிறுமியை திருமணம் செய்ததாக செல்லப்பாண்டியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் அவர்களின் பெற்றோர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் சிறுமியை மீட்டு மதுரை முத்துப்பட்டி அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

Next Story