கோவில்பட்டியில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச உணவு


கோவில்பட்டியில்  கொரோனா நோயாளிகளுக்கு  இலவச உணவு
x
தினத்தந்தி 14 May 2021 10:04 PM IST (Updated: 14 May 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது.

கோவில்பட்டி:
இந்து சமய அறநிலையத்துறையின் வேண்டுகோளுக்கு இணங்க, கோவில்பட்டி கே.ஆர். கல்வி நிறுவனங்கள் சார்பில், கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு 200 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இவற்றை கல்லூரி முதல்வர்கள் மதிவண்ணன், ராஜேஸ்வரன் ஆகியோர் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசனிடம் வழங்கினா்.
இதேபோல செண்பகவல்லி அம்மன் கோவில் அன்னதான திட்டத்திற்கு 100 பொட்டலங்களும், சொர்ணமலை கதிரேசன் கோவில் அன்னதான திட்டத்திற்கு 50 பொட்டலங்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் டாக்டர் வெங்கடேஷ், தலைமை நர்சுகள் நிர்மலா, இந்திரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கே.ஆர். கல்லூரிகளின் தாளாளர் கே.ஆர். அருணாசலம் கூறுகையில், ‘கொரோனா ஊரடங்கு காலம் முடியும் வரையிலும், எங்கள் கல்லூரிகள் சார்பில், கோவில்பட்டி அரசு மருதுவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கும் மற்றும் செண்பகவல்லி அம்மன் கோவில் அன்னதான திட்டத்திற்கு 100 உணவு பொட்டலங்களும், சொர்ணமலை கதிரேசன் கோவில் அன்னதான திட்டத்திற்கு 50 உணவு பொட்டலங்களும் தொடர்ந்து வழங்கப்படும்’ என்றார்.

Next Story