போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி


போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 14 May 2021 10:10 PM IST (Updated: 14 May 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

கொட்டம்பட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

கொட்டாம்பட்டி, மே.
கொட்டம்பட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்
மதுரை விளாச்சேரியைச் சேர்ந்தவர், சுரேந்திரன் (வயது 52). இவர் கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். 
கொட்டாம்பட்டி அருகே பிரான்பட்டி விலக்கு நான்கு வழிச்சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் பணிபுரிந்து வந்தார். 
சில தினங்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு தொற்று உறுதியானது. பின்னர் அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பரிதாப சாவு
இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுேரந்திரனுக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.  கொரோனாவுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தது மதுரை மாவட்ட போலீசாரிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story