கிராமங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு


கிராமங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 14 May 2021 10:27 PM IST (Updated: 14 May 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

கிராமங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட காக்கூர், சாம்பக்குளம்,, கீழக்கன்னிசேரி, கீழத்தூவல், பேரையூர், காலனி உள்ளிட்ட கிராம பகுதிகளில் கொரோனா பாதிப்புடன் 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக வெளியூர்களில் இருந்து வரும் நபர்கள் மூலம் கொரோனா தொற்று பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட கிராமங் களில் சுகாதாரத்துறையில் முகாமிட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கிராம பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு வருபவர்களை தங்களை தனிமைப் படுத்திக் கொண்டு தொற்று பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story