வீடுகளில் தொழுகை நடத்திய முஸ்லிம்கள்
தேனி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி வீடுகளில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர்.
தேனி:
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையாக ரம்ஜான் திகழ்கிறது.
ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் புனித நோன்பு கடைப்பிடித்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.
இந்த பண்டிகையன்று பள்ளிவாசல்கள், ஈத்கா மைதானம் ஆகியவற்றுக்கு ஊர்வலமாக சென்று தொழுகை நடத்துவார்கள்.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பால் வீடுகளிலேயே தொழுகை நடத்தினார்கள்.
இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் 2-வது அலையின் தாக்கம் அதிகம் உள்ளதால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
நேற்று ரம்ஜான் பண்டிகை என்ற போதிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தேனி மாவட்டத்தில் முஸ்லிம்கள் ஊர்வலம் மற்றும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை எதுவும் நடத்தவில்லை.
இருப்பினும், முஸ்லிம்கள் தங்களின் வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தினர்.
தேனி, போடி, உத்தமபாளையம், கம்பம், பெரியகுளம், தேவதானப்பட்டி உள்பட மாவட்டம் முழுவதும் முஸ்லிம்கள் தங்களின் வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தினர்.
பலரும் தங்கள் வீட்டு வளாகம் மற்றும் மொட்டை மாடியில் தொழுகை நடத்தி, ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
மேலும், பலரும் தங்களின் வீடுகளில் சமைத்த பிரியாணியை நண்பர்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story