பொதுமக்கள் மனுக்களை போட பெட்டி வைப்பு
சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்களை போடுவதற்கு பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி
சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்களை போடுவதற்கு பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப் படுகிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ஆக்கிரமிப்பு, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கொடுக்கின்றனர்.
இதை தவிர மற்ற நாட்களிலும் பொதுமக்களிடம் இருந்து மனுக் கள் பெறப்படுகின்றன. பெறப்படும் மனுக்கள் அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பி தீர்வு காணப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வரும் பொதுமக்களுக்காக தனியாக பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
மனுக்கள் மீது நடவடிக்கை
கொரோனா பாதிப்பு காரணமாக மனுக்களை நேரடியாக பெறுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஒரு பெட்டி வைக்கப் பட்டு உள்ளது.
அந்த பெட்டியில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் பெட்டி என்று எழுதி ஒட்டப்பட்டு உள்ளது. பொதுமக்கள் பெட்டியில் போடும் மனுக்களை தொடர்பாக பதிவேடு பராமரிக்கப்படும்.
மேலும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மனுதாரர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story