ஊரடங்கு விதிகளை மீறிய துணிக்கடைக்கு சீல்
ஊரடங்கு விதிகளை மீறிய துணிக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
கமுதி,
கமுதியில் கொரோனா 2-வது அலைபரவி வருவதால் பேரூராட்சி அதிகாரிகள், சுகாதாரத் துறையினர், காவல் துறையினர் தீவிர தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் தமிழக அரசின் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி கமுதியில் திறக்கப்பட்ட துணிக் கடைக்கு பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் சுகாதாரத் துறை ஆய்வாளர் சதீஷ்குமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் முன்னிலையில் தாசில்தார் மாதவன் உத்தரவின்பேரில் கிராம நிர்வாக அலுவலர் முருகன், வருவாய் ஆய்வாளர் வேலாயுதமூர்த்தி, கிராம உதவியாளர் வேல்முருகன் உள்பட வருவாய்த்துறையினர் துணிக்கடையை பூட்டி சீல் வைத்தனர். மேலும் கொரோனா விதிகளை மீறி கமுதி பல்லாக்குகாரத்தெரு மற்றும் பேருந்து நிலையம் அருகே உள்ள 2 தனியார் நிதி நிறுவனங்களுக்கு தலா ரூ. 5,000 அபராதம் விதித்து எச்சரித்து அடைக்கச் செய்தனர். தொடர்ந்து வாரச் சந்தை அருகில் ஒரு டீக்கடை, ஒரு பெட்டிக்கடை ஆகியவற்றிற்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story