2 நிதி நிறுவனங்களுக்கு ‘சீல்'


2 நிதி நிறுவனங்களுக்கு ‘சீல்
x
தினத்தந்தி 14 May 2021 11:12 PM IST (Updated: 14 May 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் ஊரடங்கு விதிமுறை மீறி செயல்பட்ட 2 நிதி நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெரியகடைவீதி, திண்டுக்கல்-காரைக்குடி சாலை பகுதிகளில் சுமார் 600-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பெரியகடைவீதி பகுதியில் மற்றும் காரைக்குடி,-திண்டுக்கல் சாலை பகுதியில் பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 5 நிதி நிறுவனங்கள் (நகை அடமான கடைகள்) செயல்பட்டு வருகிறது.
 தமிழகமெங்கும் இரண்டாவது அலையாக வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் வேளையில் ஊரடங்கு விதிக்கப்பட்டு வணிக நிறுவனங்கள் வட்டிக்கடைகள் அனைத்தும் மூட அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிங்கம்புணரி பகுதியில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு விதிமுறை மீறி நகை அடமான கடைகள் திறந்து செயல்பட்டு கொண்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் திருநாவுக்கரசு தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்றனர். பெரியகடைவீதி, காரைக்குடி-திண்டுக்கல் சாலை ஆகிய பகுதியில் செயல்பட்ட 2 நிதி நிறுவனங்களுக்கு சீல் ைவத்து தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


Related Tags :
Next Story