வடமாநில தொழிலாளர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
வடமாநில தொழிலாளர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விராலிமலை, மே.15-
விராலிமலையில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் விராலிமலை சிதம்பரம் கார்டனில் தங்கி பணிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் எரிவாயு பதிக்கும் பணியில் ஈடுபட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மற்ற ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து சுகாதாரத்துறையினர் அவர்களை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் தொற்று பரவாத வண்ணம் பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேலும் அவர்கள் தங்கியிருந்த சிதம்பரம் கார்டன் பகுதியின் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு அந்த பகுதி முழுவதும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக விராலிமலை ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story