மரங்கள் மீது ஆணி அடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை


மரங்கள் மீது ஆணி அடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 14 May 2021 11:55 PM IST (Updated: 14 May 2021 11:55 PM IST)
t-max-icont-min-icon

மரங்கள் மீது ஆணி அடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடகாடு, மே.15-
வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சாலையோரங்களில் ஏராளமான மரங்கள் இருந்தன. கஜா புயலின் போது, பெரும்பாலான மரங்கள் சாய்ந்தன. தப்பித்த மரங்கள் தற்போது, நன்றாக வளர்ந்துள்ளன. இந்த நிலையில் அந்த மரங்கள் மீது சிலர் விளம்பர பதாகை வைப்பதற்காக ஆணிகள் அடித்துள்ளனர். இதனால் அந்த மரங்கள் பட்டுப்போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே அந்த மரங்களை காப்பாற்ற மரங்கள் மீது ஆணி அடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story