கொரோனா நோயாளிகளை உரிய நேரத்தில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டும்-தனியார் டாக்டர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
கொரோனா நோயாளிகளை கடைசி நேரத்தில் அனுப்பி வைக்காமல் உரிய நேரத்தில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனை டாக்டர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
சிவகங்கை,
கொரோனா நோயாளிகளை கடைசி நேரத்தில் அனுப்பி வைக்காமல் உரிய நேரத்தில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனை டாக்டர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
ஆலோசனை கூட்டம்
இந்த காலக்கட்டத்தில் அனைத்து காய்ச்சல் மற்றும் அதன் அறிகுறிகள் உள்ளோரை, கொரோனா நோய் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கருதி, ஆய்வு செய்து அதன்படி சிகிச்சை அளிக்க வேண்டும். அந்த நோயாளிகளை கொரோனா பரிசோதனைக்கு, அரசு மருத்துவ நிலையங்களுக்கோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்ய ஊக்குவிக்க வேண்டும்.
கொரோனா நோயாளிகளை கடைசி நேரத்தில் அரசு மருத்துமனைகளுக்கு அனுப்பி வைக்ககூடாது. உரிய நேரத்தில் மேல் சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும். தனியார் டாக்டர்கள் நோயாளிகளை மானாமதுரை மற்றும் சிங்கம்புணரி அரசு மருத்துவமனைகளுக்கு காலை 7.30 மணி முதல் 5 மணி வரை அனுப்பலாம்.
அது போல, சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, காரைக்குடி தலைமை மருத்துவமனை, சிவகங்கை பண்ைண பொறியியல் கல்லூரி, திருப்பத்தூர் ஸ்வீடிஷ் மருத்துவமனை, அமராவதிபுதூர் சோமநாதபுரத்தில் அமைந்துள்ள கோவிட் மையங்கள் ஆகியவற்றிற்கு 24 மணி நேரமும் நோயாளிகளை அனுப்பலாம்.
தடுப்பூசி
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் இணை இயக்குனர் (மருத்துவம்) இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குனர் (சுகாதாரம்) யசோதாமணி, மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story