கொரோனாவுக்கு ஆயுதப்படை போலீஸ்காரர் பலி
2 டோஸ் தடுப்பூசி செலுத்திய நிலையிலும் கொரோனாவுக்கு ஆயுதப்படை போலீஸ்காரர் பலியாகி உள்ளார்.
மங்களூரு:
2 டோஸ் தடுப்பூசி செலுத்திய நிலையிலும் கொரோனாவுக்கு ஆயுதப்படை போலீஸ்காரர் பலியாகி உள்ளார்.
ஆயுதப்படை போலீஸ்காரர்
பெலகாவி மாவட்டம் உக்கேரியை சேர்ந்தவர் சித்தப்பா சிங்கே. முன்னாள் ராணுவ வீரரான இவர் பணி ஓய்வு பெற்ற பின்னர், போலீஸ் பணிக்கு தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.
இவர் மங்களூருவில் நகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சித்தப்பா சிங்கே முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசியும் செலுத்தி இருந்தார்.
கொரோனாவுக்கு பலி
இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சித்தப்பாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை சித்தப்பா இறந்தார். இதுபற்றி அறிந்த சுகாதாரத்துறையினர் சித்தப்பாவின் உடலை எடுத்து சென்று மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி அடக்கம் செய்தனர்.
2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட பிறகும் கொரோனாவுக்கு போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் மங்களூரு போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story