20 அடி குழியில் தடுமாறி விழுந்த முதியவர் மீட்பு
பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட 20 அடி குழியில் தடுமாறி விழுந்த முதியவரை பத்திரமாக தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
திருச்சி,
பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட 20 அடி குழியில் தடுமாறி விழுந்த முதியவரை பத்திரமாக தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
குழிக்குள் விழுந்த முதியவர்
திருச்சி காட்டூர் கைலாஷ் நகர் அம்மன் நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தில் இறங்கு குழிகள் அமைப்பதற்காக ராட்சத எந்திரங்கள் மூலம் குழி தோண்டப்பட்டு வருகிறது. நேற்று காலை 11 மணி அளவில் அந்த பகுதியில் குழி தோண்டப்பட்ட போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களில் ஒருவரான சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த கைலாசம் (வயது 60) கால் தடுமாறி 20 அடி ஆழ குழிக்குள் விழுந்தார். இதனை பார்த்த சக தொழிலாளர்கள் பதறினர்.
இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறையினர் நிலைய அதிகாரி (போக்குவரத்து) சரவணன் தலைமையில் முன்னணி தீயணைப்பு வீரர்கள் மைக்கேல், ஆர்தர் மற்றும் குழுவினருடன் அங்கு விரைந்து சென்றனர். குழிக்குள் மண்சரிவு ஏற்பட்டதால் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கைலாசத்தை ஏணி கயிறு மூலம் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
பின்னர் அவரை முதலுதவி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரியான நேரத்தில் தீயணைப்பு படையினர் வந்து முதியவரை காப்பாற்றியதற்காக அப்பகுதி மக்களும், தொழிலாளர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story