அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை தின்று துறையூர் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கணவர் தற்கொலை


அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை தின்று துறையூர் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கணவர் தற்கொலை
x
தினத்தந்தி 15 May 2021 12:37 AM IST (Updated: 15 May 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

துறையூர் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. கணவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை தின்று
துறையூர் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. 
 கணவர் தற்கொலை
தீயணைப்பு துறையில் அதிகாரியாக பணியாற்றியவர்
கே.கே.நகர், 
துறையூர் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. கணவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார். அவர் திருச்சி விமான நிலையத்தில் உள்ள தீயணைப்பு துறையில் அதிகாரியாக பணியாற்றியவர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
முன்னாள் எம்.எல்.ஏ. கணவர்
திருச்சி கே.கே.நகர் திருவாசகம் மணி தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 52). இவர் திருச்சி விமான நிலையத்தில் உள்ள தீயணைப்பு படையில் முதுநிலை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ராணி. இவர் துறையூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார்.
இவர்களுக்கு அருண் பாபு (28), ஜீவானந்த் (23) என்ற மகன்களும், நர்மதா (26) என்ற மகளும்உள்ளனர்.
தூக்க மாத்திரை தின்றார்
கடந்த 9-ந் தேதி ராமச்சந்திரன் தனது வீட்டில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை ராமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கே.கே. நகர் போலீசார் தெரிவித்தனர்.

Next Story