வீட்டிற்குள் புகுந்த பாம்பு
வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிப்பட்டது.
நொய்யல், மே.15-
கரூர் மாவட்டம் நடையனூர் அருகே உள்ள வெள்ளதாரை பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். இவரது வீட்டிற்குள் நாகபாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. அதை பார்த்த அரவிந்த் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த பாம்பை வெளியே விரட்ட முயன்றார். ஆனால், அந்த பாம்பு வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே சுற்றி, சுற்றி வந்தது. நீண்ட நேரம் போராடியும் அந்த பாம்பை வெளியே விரட்ட முடியாததால் இதுகுறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தினருக்கு அரவிந்த் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டிற்குள் பதுங்கிய பாம்பை நவீன கருவி மூலம் பிடித்து சாக்குப் பைக்குள் போட்டு வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story