முககவசம் அணியாத, சமூக இடைவெளியை பின்பற்ற 169 பேருக்கு அபராதம்
முககவசம் அணியாத, சமூக இடைவெளியை பின்பற்ற 169 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அரியலூர்:
முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நேற்று சாலையில் தேவையில்லாமல் சுற்றியவர்களின் இரு சக்கர வாகனங்கள் ஏதும் போலீசாரால் பறிமுதல் செய்யப்படவில்லை. ஊரடங்கை மீறியதாக யார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. ஆனால் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் வந்த 151 பேருக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.30 ஆயிரத்து 200-ம், சமூக இடைவெளியை பின்பற்றாத 18 பேருக்கு தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.9 ஆயிரம் என மொத்தம் 169 பேருக்கு ரூ.39 ஆயிரத்து 200 அபராதமாக போலீசாரால் விதிக்கப்பட்டுள்ளது.Related Tags :
Next Story