கொரோனாவுக்கு ஒருவர் பலி
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இறந்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 23 பேரும், ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 14 பேரும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 48 பேரும், திருமானூர், ஆண்டிமடம் ஆகிய ஒன்றிய பகுதிகளில் தலா 22 பேரும், செந்துறை ஒன்றிய பகுதியில் 20 பேரும், தா.பழூர் ஒன்றிய பகுதியில் 14 பேரும், ஜெயங்கொண்டம் ஒன்றிய பகுதியில் 40 பேரும், அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களில் 4 பேரும் என மொத்தம் 207 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 7,105 ஆக உயர்ந்துள்ளது. இதில் 54 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்றுக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்ட பகுதியை சேர்ந்த 51 வயது ஆண் ஒருவர் உயிர் இழந்தார். மேலும் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த ஒருவர் உயிர் இழந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை ஜெயங்கொண்டம் பகுதியில் 5-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ள நிலையிலும், பலர் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்காமலும் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. 6,013 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,037 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 808 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று 721 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும், 60 பேருக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசியும் என மொத்தம் 781 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story