விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனங்களில் சென்றவர்களுக்கு அபராதம்
ஆண்டிமடத்தில் விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனங்களில் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆண்டிமடம்:
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று மதியம் 12 மணி வரை அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் போக்குவரத்தை போலீசார் அனுமதித்தனர். மேலும் ஆண்டிமடம் 4 ரோடு சந்திப்பில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நடேசன், இளங்கோவன் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு சென்ற வாகனம், மருத்துவ தேவைக்கு செல்லும் வாகனங்களைத் தவிர இருசக்கர வாகனங்கள், கார்கள், சரக்கு வாகனம், கனரக வாகனம் போன்ற வாகனங்களை மறித்து நிறுத்தி திரும்பிச் செல்ல அறிவுறுத்தினர். இதனால் ஜெயங்கொண்டம்- விருத்தாச்சலம் சாலையின் இருபக்கமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்தன. ஆண்டிமடம் வருவாய்த்துறை சார்பாக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசங்கர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை, சுகாதார ஆய்வாளர் உமாபதி, வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன், வட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் தலைமையிலான குழுவினர் முக கவசம் அணியாத 7 பேருக்கு தலா ரூ.200 வீதம் 1,400 ரூபாயும், காரில் பயணம் செய்த சமூக இடைவெளியை கடைபிடிக்காத 4 பேரிடம் தலா ரூ.500 வீதம் 2 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 3,400 ரூபாய் வசூலித்தனர். ஆண்டிமடம் போலீசார் சார்பாக முககவசம் அணியாத 20 பேரிடம் தலா ரூ.200 வீதம் 4 ஆயிரம் ரூபாயும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 3 பேரிடம் தலா ரூ.500 வீதம் 1,500 ரூபாயும் என மொத்தம் 5,500 ரூபாயை அபராதமாக நேற்று வசூல் செய்தனர் இருசக்கர வாகனத்தில் அவ்வழியே வந்தவர்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
Related Tags :
Next Story