ஒரே தெருவில் 5 பேருக்கு கொரோனா
வி.கைகாட்டி அருகே ஒரே தெருவில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அப்பகுதியில் கருவேல மரக்கிளைகளை போட்டு பாதைகள் அடைக்கப்பட்டது.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள தேளூர் காலனி தெருவில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவத்துறை மூலம் நேற்று முன்தினம் அங்கு கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது. பரிசோதனையில் அப்பகுதியில் உள்ள ஒரே தெருவை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து சுகாதார துறையினர் மற்றும் ஊராட்சி சார்பில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வெளியூரில் இருந்து வருபவர்கள் அந்த தெருக்களுக்குள் நுழைய முடியாதபடியும், அங்கு இருப்பவர்கள் வெளியில் செல்லாதவாறும் காலனியில் தெருக்களுக்கு செல்லும் பாதைகளில் கருவேல மரக்கிளைகள் வெட்டிப்போடப்பட்டு அடைக்கப்பட்டன.
Related Tags :
Next Story