பழமையான மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
சாத்தூரில் வீசிய சூறாவளி காற்றினால் பழமையான மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாத்தூர்,
சாத்தூரில் வீசிய சூறாவளி காற்றினால் பழமையான மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சூறாவளி காற்று
சாத்தூரில் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் வைப்பாற்றின் கரையில் நகராட்சிக்கு சொந்தமான சொக்கலிங்கம் பூங்கா உள்ளது.
இந்த பூங்கா அருகே பழமையான மரங்கள் உள்ளன. இந்தநிலையில் சாத்தூரில் நேற்று பலத்த சூறாவளி காற்று வீசியது. 40 நிமிடம் வீசிய காற்றினால் சாலையின் ஓரத்தில் இருந்த சுமார் 60 ஆண்டுகால பழமையான வேப்ப மரம் வேரோடு சாய்ந்து தேசியநெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டின் குறுக்கே விழுந்தது.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் சாத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்புத்துறையினர் கருவிகள் கொண்டு மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பிறகு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. மரம் சாய்ந்து விழுந்ததால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரம் விழுந்த சமயத்தில் அங்கு யாரும் செல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story